இன்றைய உதவிச் செயற்றிட்டம்!!


 அவுஸ்ரேலியா சிட்னியில் வாழ்கின்ற   புலம்பெயர்  உறவு ஒருவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வரும் இனங்காணப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.


அத்தோடு தந்தை இன்றி தாயாரோடு வசித்துவரும் சிறுவன் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு ஒரு தொகைப் பணத்தினையும் வழங்கி வைத்துள்ளார்.


யுத்த காலத்தில் மக்களோடு நின்று மக்களிற்காக கடமைகள் புரிந்தவர்.புலம்பெயர்ந்த சென்று வெளிநாட்டில் வாழ்கின்ற போதும் எமது மக்களுக்காக தனது பணியைச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இவ் உதவியினை உறவுகளிற்காக வழங்கி வைத்துள்ளார்.பிறந்த தினத்தை இவ்வாறு மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில்  நினைவுகொள்வதன் மூலம் ஆசிகளை அதிகம் பெற்றுக்கொள்ளமுடியும் எனபதை ஏனையோருக்கும் உணர்த்தும் இவரது நல்லெண்ணத்தை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். 


உதவி பெற்றவர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.  தமிழருள் இணையதளம் சார்பில் நாங்களும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.