ஜனாதிபதிக்கு வந்த அவசர மடல்!!

 


தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்கள் தமது எதிர்ப்பினை அரசுக்கு எதிரான போராட்டங்களாக வெளிப்படுத்திவரும் நிலையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, சமூகவலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன. 


மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்து ஊரடங்கையும் மீறி  நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட கடிதமொன்று அரசாங்கத்திற்கும், அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மல்வத்து பீடத்தின் பொதுத் தலைவர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன அஸ்கிரி பீடத்தின் பொதுத் தலைவர் தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி அமரபுர ,மகானா நிகாய மகாநாயக்கர் மகுலேவே ஸ்ரீ விமல ஸ்ரீ லங்கா ராமன்ன நிகாய மகாநாயக்க தேரர் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானமை குறிப்பிடத்தக்கது. 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.