மஹிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

 


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 8ஆம் திகதி மன்றில் ஆஜராகுவதற்காக நோட்டீஸ் அனுப்புமாறு, உயர்நீதிமன்றம், நேற்று (04) உத்தரவிட்டது.

குறித்த மனுக்கள், நீதியரசர்களான காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவு, எரிவாயு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர், அமைச்சரவை மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் மனுவில் கோரியுள்ளனர்.

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 42 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.