பணம்கொடுத்து பஞ்சம் வாங்கியவர்கள்!!

 


ஐந்தாம் தலைமுறை 

அலைக்கற்றையை யோசித்துக்கொண்டிருந்ததால் 

இந்தத் தலைமுறைக்கான 

நாற்றுக் கற்றையை

நடமறந்தோம். 

எரிவாயு சிலிண்டர் நம்பிக்கையில் 

விறகு மரங்களை 

வீசிவிட்ட இனமானோம். 

வண்டில் மாடுகள் 

வாகன எரிபொருள் கேட்டதா? 

வைக்கோலும் புல்லும்தானே கேட்டன. 

காற்றினை விற்றுவிட்டு 

காற்றாடி வாங்கியற்கு 

யார் பொறுப்பு? 

பாலினை 

பாதிவிலைக்கு கொடுத்து 

முழுவிலையில் 

முழு ஆடைப்பால்மாவை 

பழக்கியது யார்? 

பழஞ்சோற்றுக் கஞ்சியை 

பரிகாசம் செய்து 

பீட்சாவின் பெருமைசொல்லியதார்? 

கணினிமயம் தேவைதான் 

காணி மாயம் இல்லாதபடி. 

இணையக்கல்வி நல்லதுதான்

ஏழைக்கல்வி தொலையாதபடி.

நவீன மருத்துவம் பரவட்டும் 

சித்த மருத்துவம் சிதையாதபடி....  

இரசாயன உரம் 

ஏராளம் பயன்படுத்து 

இயற்கை உரத்தின் 

தரத்தையும் உயர்த்து. 

கணினியில் எழுது

கையெழுத்தை மறவாதபடி.... 

உயிரை எடுத்துவிட்டு 

சடலத்தை சோடித்து சந்தோசமேன்? 

உலக மயமாதல் என்பதே

உலக மாயமாதலடா. 

அதில் 

உள்விழுந்து அமிழ்வது 

ஒன்றுமறியா இனமடா. -யோ.புரட்சி-


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.