நாளைய வெறுமை - கோபிகை!!

 


காடழித்தல் என்ற சொல்லின் 

கோரமுக தாண்டவத்தில் 

வான்பரப்பின் நிறம் மங்கி 

மாமழையும் தான் குறைந்து 

பசுமையும் வெறுமையாகி 

மரங்களெல்லாம் மரணிக்க 

நீர் வளமும் நிந்தையாகி 

கனிமையது கானலாக 

செயற்கையின் செயலெல்லாம்

இயற்கையைக் காவுகொள்ள  

மனிதமும் ஒரு நாள் 

நீருக்காய் கையேந்தி 

நிலவெடிப்பில் தான் விழுந்து 

அக்கினியின் எரிதணலில் 

ஏதிலியாய் இறந்திடவா

மரங்களை அழிக்கிறாய் 

மனிதா நீ பதில் சொல்?

மரணத்தின் பின்னர் 

மரப்பெட்டி செய்வதற்கும் 

மரங்கள் தான் வேண்டுமென்று

உணர்ந்திடுவாய்,  

மாமனிதா ..புரிந்திடுவாய்....


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.