ஏதிலி வாழ்வு - கோபிகை!!
கட்டிய துணியோடு
கந்தல் கோலம் கொண்டு
அயல் தேசம் சென்ற
எம் உறவுகளே!!
அழைக்க யாரும் வராமல்
அகதிமுகாம் சென்றதை
அறிந்த போது
வலிக்கிறது மனம்....
அவமானச் சுவடுகள்
ஏதிலிக்கு இயல்புதானே,
இழப்பின் வலியென்ன
தமிழனுக்கு புதிதா?
மனிதக் கூட்டுக்குள்
மக்கிப்போனோம்...
கரைதொட்ட அலைகளில்
கனிவேதும் கண்டீரோ...
முகவரிகள் தொலைந்தபோதே
முடவராய் ஆனோமே...
பசிக்கு உணவின்றி
பாரதம் செல்லும் நிலை...
அவமானம் வலியெல்லாம்
அகதிக்கும் உண்டென்று
ஏனோ ...
எல்லோரும் நினைப்பதில்லை....
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை