சஜித் விடுத்துள்ள கோரிக்கை!!

 அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை முன்வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். 


அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்ற தலைப்பில் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 


பிரதம தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இளம் தலைமுறை புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட முழு நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்காக பாராளுமன்றத்தை வலியுறுத்துவதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


எனவே இந்த தருணத்தில் சபாநாயகர் எடுக்கும் தீர்மானங்களே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு உடனடி பதிலை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.