விஜய்யை சந்தித்த சிவாங்கி!!

 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் ஒரு தீவிர விஜய் ரசிகை என்றும் கூறப்படுவதுண்டு.


இந்த நிலையில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலின் படப்பிடிப்பின்போது விஜய்யை சந்திக்க ஷிவாங்கிக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்ததாக தெரிகிறது.


இது குறித்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஷிவாங்கி, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்தேன் என்றும்,அவருடைய அன்பான வார்த்தைகள் என மனதில் எப்போதும் இருக்கும் என்றும், இந்த சந்திப்புக்கு எனக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். விஜய்யை ஷிவாங்கி சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.