மேலும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

 


மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை  படகு  மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மழையில் நனைந்தபடி கடலில் உயிருக்கு ஆபத்தான முறையில் வந்தவர்களை கடலோர காவல் அதினாரிகள் மீட்டு காவல் நிலையத்திலேயே தங்கதுள்ளனர். 


மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், தனி நபர் ஒருவருமாக  18 பேர் தமிழகம் சென்று சேர்ந்துள்ளனர். 


பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏற்கனவே 42 பேர் இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.


``இனி இலங்கைக்குச் செல்ல மாட்டோம் - தமிழகத்தில் ஒரு ஓரமாக வாழ்ந்து கொள்கிறோம்"  என இவர்கள் கண்ணீருடன் தெரிவித்ததாக   இந்திய இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.