மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும்

 


மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று இரவு 10 மணிக்கு மூடப்படவிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 2 மணி வரை எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், வரிசையில் நின்றவர்கள் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கீழ்ப்படியாமல் 3.30 மணி வரை எரிபொருளை விநியோகிக்குமாறு பலவந்தமாக கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநிலை நீடித்தால், இந்த சேவையை தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.