கீரி கடித்த வயோதிபப்பெண் உயிரிழப்பு
கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ அறிக்கையிட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்த வயோதிபப் பெண்ணின் மூளையை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா பணிந்துள்ளார்.
புலோலி ஆலடியைச் சேர்ந்த பாலசுந்தரம் மங்கையக்கரசி (வயது-69) என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.கடந்த பெப்ரவரி மாதம் வயோதிபப் பெண்ணுக்கு கீரி கடித்துள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். எனினும் அவருக்கு விலங்கு விசர் தடுப்பூசி மருந்து வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் 3 மாதங்களின் பின் அவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோயே காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார மருத்துவமனையில் சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அவருக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்ய மூளையை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப பணித்தார்.
கருத்துகள் இல்லை