தமிழனாக சிந்தனை செய்....!


வலிசுமந்த மாதத்தின்

வாரமும்

மாவீரர்நாள் மாதத்தின் வாரமும்

தமிழின விடுதலையின்

தாங்கு தூண்கள்!


இதை

களியாட்டங்களினாலும்

கொண்டாட்டங்களினாலும்

சிதைக்க முடியாது!

அதன்

உயிர்ப்பை

அழிக்க முடியாது!


இந்த

நாட்கள் வேடிக்கை

மனிதரின் கூடாரமாக

போகுமானால்

வேட்கையின் வீரியம்

தணிந்து போகும்!


இதை

உணராதவன்

தாய் மண்ணின் கற்பை

சூறையாடுவதற்கு

சமம்!


தமிழனின்

உணர்வுகளையும்

வலிகளையும்

இக்காலப்பகுதியில்

வலிமையாய்

கொண்டு செல்லவேண்டுமே தவிர

நலிவடையும்

செயற்பாடுகளை

நிறுத்தவேண்டும்!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.