முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இன்று அஞ்சலி 

 


கொல்லப்பட்டவர்களுக்காக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளாராம்.


சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் தான்......


🔴09.07.1995 - நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான சிறிலங்கா விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


🔴22.09.1995 - நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 தமிழர்கள் கொல்லப்பட்டனர்


🔴1996 நடுப்பகுதிக்கு பின்னரான 6 மாத காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜென்ரல் ஜனக பெரேரா இருந்த போது 700க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமலாக்கப்பட்டிருந்தனர். அவர்கள் செம்மணிப்பகுதிகளில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உண்மை, கிருசாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவச்சிப்பாய் ஒருவர் மூலம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இராணுவச்சிப்பாய் அடையாளம் காட்டிய புதைகுழிகளில் இருதடவைகள் நடந்த அகழ்வுப்பணிகளின் போது மொத்தமாக 16 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அத்துடன் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன.


🔴1996இல் சத்ஜெய நடவடிக்கை மூலம் கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்த சிறிலங்கா இராணுவம் அங்கு 184 தமிழர்களை காணாமலாக்கியது. பின்னர் அவர்களில் 72 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது


🔴11.02.1996 - திருகோணமலை குமரபுரத்தில் 26 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இதன் போது பாடசாலை மாணவி உட்பட பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்


🔴16.03.1996 - பூநகரி நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையினரின் உலங்குவானூர்திகள் நடாத்திய தாக்குதலில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


🔴15.07.1997 - கிளிநொச்சி அக்கராயன் வைத்தியசாலை மீது சிறிலங்கா இராணுவம் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.


🔴01.02.1998 - திருகோணமலை தம்பலகாமத்தில் நான்கு மாணவர்கள் உட்பட 08 பேர் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.


🔴10.06.1998 - சுதந்திரபுரம் மீது சிறிலங்கா இராணுவம் மற்றும் வான்படை இணைந்து நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்


🔴20.11.1999 - மன்னார் மடுத் தேவாலயம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் 35 தமிழர்கள் கொல்லப்பட்டனர்


🔴25.10.2000 - புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களை தடுத்துவைத்திருந்த பிந்துனுவேவ புனர்வாழ்வு முகாமிற்குள் புகுந்த சிங்களக் காடையர் குழு நடாத்திய தாக்குதலில் 28 தமிழர்கள் கொல்லப்பட்டனர்


🔴19.12.2000 - மிருசுவில் தங்கள் வீடுகளைப் பார்வையிடச் சென்ற 8 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டார்கள்


இதைத்தவிர தமிழர்களை இனஅழிப்புச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனான பல படுகொலைகளை சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது தனது படையினரை வைத்துச் செய்திருந்தார். 


அதிலும் மிருசுவில் படுகொலை வழக்கு, செம்மணி புதைகுழி வழக்கு, குமரபுரம் வழக்கு ஆகியவற்றில் தமிழர்களைக் கொலை செய்தவர்கள் இனங்காணப்பட்ட போதும், நீதி எதுவுமே கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.


இவ்வாறான ஈவிரக்கமற்ற கொடுரக்கொலைகளின் காரணமாகவே சந்திரிக்கா ”நரபலி நாயகி” என தமிழர்களால் அழைக்கப்பட்டார்.


அவரின் ஆட்சிக் காலத்தில் தான் தமிழர் தாயகம் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு, தமிழ் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்பட்டனர்.


இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக சந்திரிக்கா  உண்மையிலேயே மனமுருகி நினைவேந்தியிருந்தால், அவர் தனது ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற முயலவேண்டும். இல்லாவிட்டால் சந்திரிக்காவும் வழமை போன்றதொரு சந்தர்ப்பவாத பௌத்த சிங்கள் பயங்கரவாதியே!


03 ரூபாக்கு பாண் தந்தவா, கண்ணும் கருத்துமா பாத்தவா... See more என்ற உருட்டுரைகளை பகிருபவர்கள் சந்திரிக்காவின் வரலாறுகளை ஒரு தடவை படித்துப்பார்க்க வேண்டும்.


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.