நந்தரட்ண தேரர் படுகொலை !!


தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற நந்தரட்ண தேரர் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது.


தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் எழுச்சியுடன் திருகோணமலையில் நடைபெற்ற ”பொங்குதமிழ்” நிகழ்வில் பங்கேற்றி, தேசியத் தலைவரின் பதாகையின் முன்நின்று தமிழர்களுக்காக உரையாற்றியிருந்தார்.


அத்துடன் ஜனவரி 02, 2006 அன்று திருகோணமலை கடற்கரையில் 05 தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவேந்தலில் இந்த நந்தரட்ண தேரர் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.


நந்தரட்ண தேரர் அவர்கள் திருகோணமலை மாவட்டம் மொரவெவ பகுதியிலுள்ள மகாதியுல்வெவ விகாரையின் தலைமைக்குருவாக இருந்தார். 


அந்நிலையில் 13.05.2007 அன்று காலை 9.30 மணியளவில் அவரது விகாரைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியே அழைத்து சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.


மொரவெவ, மகாதியுல்வெவ ஆகியவை முன்னர் தமிழ்ப் பிரதேசங்களாக இருந்தவையாகும். அவை முன்னர் முறையே முதலிக்குளம் மற்றும் மகாவிளாங்குளம் எனப் பெயர்களைக் கொண்டிருந்தன. 1948ம் ஆண்டுக்குப் பின்னரான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் திட்டமிட்ட பௌத்த சிங்களமயமாக்கல் மூலம் இப்பிரதேசங்கள் முற்றுமுழுதாக சிங்களமயமாக்கப்பட்டிருந்தன.


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

#தமிழினப்படுகொலை_நாட்குறிப்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.