இன்னும் நான் வீர தமிழனென்று..!!!

 


வண்ண ஆடைகளை களைந்து

வரியுடைகள் அணியவில்லை  


தங்க நகைகளினை மறந்து 

நஞ்சுமாலை சூடவில்லை  


புத்தக பைகளினை துறந்து

ஆயுதங்கள் தூக்கவில்லை


பஞ்சு மெத்தைகளினை மறந்து

காட்டிலும் தூங்கவில்லை  


எழுந்த முதல் காதலினை 

தேசத்திலே வைக்கவில்லை 


விழுந்த ஒரு  நொடியினிலும் 

தாய் மண்ணை தழுவ வில்லை 


ஆயினும் நான் 

கூவிக்கொண்டுதான் இருக்கிறேன் 


இன்னும் நான் 

வீர தமிழனென்று....! வரிகள்:

-ரேகா சிவலிங்கம்-

06.05.2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.