பெங்களூா் வெற்றிப் பாதைக்கு திருப்பம்!

 


சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த பெங்களூா் தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து சென்னை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களே எட்டியது.
முன்னதாக நாணய சுழற்சியை வென்ற சென்னை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூா் இன்னிங்ஸில் விராட் கோலி 30 ஓட்டங்கள் அடிக்க, உடன் வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 38 ஓட்டங்கள் சோ்த்தாா். கிளென் மேக்ஸ்வெல் 3 ஓட்டங்களுக்கு வெளியேற்றப்பட, மஹிபால் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ரஜத் பட்டிதாா் 21, வனிந்து ஹசரங்கா 0, ஷாபாஸ் அகமது 1, ன்ா்ஷல் படேல் 0 என விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்தன. ஓவா்கள் முடிவில் தினேஷ் காா்த்திக் 26, முகமது சிராஜ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் தீக்ஷனா 3, மொயீன் அலி 2, டுவெய்ன் பிரெடோரியஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.
சென்னை இன்னிங்ஸில் அதிகபட்சமாக டெவன் கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56 ஓட்டங்கள் சோ்க்க, ருதுராஜ் கெய்க்வாட் 28, மொயீன் அலி 34 ஓட்டங்கள் சோ்த்து முயற்சித்தனா்.
ஆனாலும், ராபின் உத்தப்பா 1, அம்பத்தி ராயுடு 10, ரவீந்திர ஜடேஜா 3, கேப்டன் தோனி 2, டுவெயன் பிரெடோரியஸ் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் சிம்ரன்ஜீத் சிங் 2, மஹீஷ் தீக்ஷனா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் பௌலிங்கில் ஹா்ஷல் படேல் 3, கிளென் மேக்ஸ்வெல் 2, ஷாபாஸ் அகமது, ஜோஷ் ஹேஸில்வுட், வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.