வன்முறைச் சம்பவம் தொடர்பில் 31 முறைப்பாடுகள்!!

 


நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பங்கள் தொடர்பில் இதுவரையில் 31 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு 669 உதவிக்குறிப்புகள் ( tip ) கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 73 வீடியோக்களும், 484 படங்களும் தங்களுக்கு பொதுமக்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஆதாரங்களை அனுப்பி வைத்துள்ள பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் நன்றி தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.