இலங்கை இளைஞன், சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவு!!

 


சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPho) போட்டிகளுக்காக இலங்கை மாணவன் செம்பாய் சுபாகரன் பிரணவன் (Piranavan Subaharan) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் மிகச் சிறந்த 600 உயர்தர மாணவர்கள் போட்டியிட்ட இக்கடுமையான போட்டிகளில் பங்குகொண்டு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்று எங்கள் இனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் என முகநூலில் Gowridhasan Vibulananthan தெரிவித்துள்ளார்.

செம்பாய் பிரணவன் என்னிடம் தனது 6 வயது தொடக்கம் கடந்த பதினொரு வருடங்களாக தொடர்ச்சியாக கராத்தேப் பயிற்சிகளைப் பெற்று வருகிறார் என்பதும் பல்வேறு தேசிய, சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கங்களைப் பெற்று கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, வருகின்ற ஓகஸ்ட் மாதம் டென்மார்க் நாட்டில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் சர்வதேச இதோசு ரியு கராத்தேச் சுற்றுப்போட்டிகளுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.