இசையமைப்பாளர் டி. இமான் மறுமணம்!!

 


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் டி,. இமான் மறுமணம் செய்த நிலையில் இமான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

டி. இமான் மறுமணம் செய்துகொண்ட பெண்ணின் பெயர் எமிலி எனவும், இவர் பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில்  டி. இமான் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக இமான் அறிவித்தார். 2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.

சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துள்ளார்.

டி. இமானின் இசையில், ரஜினி நடித்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.