குடும்பத்தகராறில் உயிரிழந்த சம்மாணி ராஜபக்க்ஷ!


குடும்பத்தகராறு காரணமாக அக்மீமன அங்கொக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான சம்மாணி ராஜபக்ச , கணவனின் கத்திக்குத்துக்கு பலியாகியுள்ளார்.

அக்மீமன, அங்கொக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஆர். சம்மாணி ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

தம்பதியினருக்கு மத்தியில் கடந்த ஒரு வருட காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி மாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்து, பெண் தமது இரண்டு பிள்ளைகளுடன் மாலபே பிரதேசத்திலுள்ள தனது தாயின் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இதன்போதே கூரான கத்தியால் மனைவியின் நெஞ்சிலும் முதுகிலும் குத்தியுள்ளார்.

இதனையடுத்து இரு பிள்ளைகளையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தனது சகோதரியிடம் ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சந்தேக சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.