பிரான்சில் பல்லின மக்களின் 2022 மேதினப் பேரணியோடு பயணித்த தமிழீழ மக்கள்!📸

 பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2022 மே 1 தொழிலாளர் நாள் பேரணி பல்லின மக்களின் பிரமாண்ட பேரணியோடு எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.

பாரிஸ் நகரின் Place de la République நினைவுத் தூபிப் பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் ஆரம்பித்த பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து சென்றது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் திருஉருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் பதாதைகளைத் தாங்கியநிலையில் மக்களும் செயற்பாட்டாளர்களும் அணிவகுத்துச் சென்றனர்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்கியிருந்ததுடன், ஒலி பெருக்கிகளிலும் உணர்வுமிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தமை வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.


குர்திஸ்தான் மக்களும் தமிழ் மக்களின் பேரணிக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
பேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பேரணி சென்றுகொண்டிருந்த பாதைகளில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகளால் வர்த்தக நிலையங்கள், வங்கிகள், பேருந்து தரிப்பிடங்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தமையைக் காணமுடிந்தது.
நிறைவாக பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார்.
தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் பேரணி அமைதியாக நிறைவுகண்டது.
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.