பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலை, நீதிவேண்டிய மாநாடு!

 13.05.2022 தமிழினப்படுகொலையின் முள்ளிவாய்கால் 13 ஆவது நினைவு சுமந்து பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலை, இனத்துன்புறுத்தலுக்கு எதிராகவும் 13 மே காலை 9.00 மணிக்கு நீதிவேண்டிய மாநாடு நடாத்தப்பட்டது. மாநாட்டின் ஏற்பாட்டினை பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் பாதுகாப்பு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


நிகழ்வு முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், கம்னியூட்ஸ் கட்சியின் தலைவி தமிழர் பாதுகாப்பு குழுவின் தலைவி Mme Marie – George Buffet ( Députee Présidente du groupe d’ etudes) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விசயம் செய்த யாழ் மாநகர முதல்வர் திரு. மணிவண்ணன் மற்றும் 2009 காலப்பகுதியில் வைத்தியராகக் கடமையாற்றிய வைத்தியர். வாமன்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர்கள், தமிழ் ஆலோசகர்கள் இளையோர்கள், இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கட்டமைப்புக்கள், ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப்பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.


றோகின்யா மக்கள் பிரதிநிதிகள், தென் ஆபிரிக்கா வழக்கறிஞர்  பிரதிநிதிகளிடம் கலந்து கொண்ட தமிழ்மக்கள்  இன்றைய காலத்திற்கு தேவையான பொதுவான கேள்விகளைக் கேட்டிருந்தனர். அதில் உக்கிரேன் நாட்டில் 400 மக்கள் கொல்லப்பட்ட போது அதனை உலகம் இனப்படுகொலையெனக் கூறியது  ஆனால் எமது மக்கள் இலட்சக்கணக்காக படுகொலை செய்யப்பட்டதை ஏன் இத்தனை ஆண்டுகள் கடந்து கூற மறுக்கின்றது இதில் பிரான்சு தேசத்தின் நிலைபாட்டையும் கேட்டிருந்தனர் அதற்கான பதிலையும் பிரான்சு நாடு ஆனது ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இருக்கும் நிலைபாட்டை தமிழர் பாதுகாப்பு குழுவின் தலைவி விளக்கியிருந்தார். மதியம் 1.30 மணிவரை தொடர்ச்சியாக மாநாடு நடபெற்றது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.