ஜேர்மன் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை

 


ஜேர்மனியில் பல நோயாளிகளின் மரணத்திற்கு காரணமான ஒரு போலி பெண் மருத்துவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


ஜேர்மன் தனியுரிமை விதிகளின்படி பெயர் குறிப்பிடப்படாத அந்த 51 வயதான பெண், போலியான உரிமத்தைப் பயன்படுத்தி மயக்க மருந்து நிபுணராகப் பணியமர்த்தப்பட்டவர் என்று காசெலில் உள்ள பிராந்திய நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர்.


குற்றம்சாட்டப்பட்ட பெண் கொடுத்த மயக்க மருந்தால் மூன்று நோயாளிகள் உயிரிழந்தனர், மேலும் பல நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.