கோட்டா கோ கம“ வில் மெழுகுவர்த்திப் போராட்டம்!!

 


கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டமொன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

போராட்டத்தின் ஐம்பதாவது நாளான எதிர்வரும் 28ஆம் திகதி காலை பத்து மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

அதற்கு இணையாக கோட்டா கோ கமவிலும் பண்டாரநாயக்க சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘நாட்டுக்காக மெழுகுவர்த்தி ஏந்துவோம்’ என்ற தலைப்பிலான இந்தப் போராட்டத்தில் கோட்டா கோ கமவுக்கு ஆதவரளிக்கும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தருகின்றவர்கள் தேசியக் கொடி மற்றும் 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான பதாகைகளுடன் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.