அஞ்சலி செலுத்திய கோட்டாபய, மஹிந்த!


13 ஆவது தேசிய போர் வீரர்கள் தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தார். அவருடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவும் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தார்.

நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குனரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரண, பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவாகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.