முதலாவது அணியாக தகுதி பெற்றது குஜராத்!


2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக, குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

இராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில்,191 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.