மகளிடம் பாலியல் தொல்லை!

 


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர், மனைவி இறந்து விட்ட நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.

பாடசாலையில் படித்து வந்த அந்தச் சிறுமி தினமும் பள்ளிக்கு வந்த போது சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனை கவனித்த ஆசிரியை, சிறுமியை தனியாக அழைத்துப் பேசினார்.
அப்போது அவரது தந்தை தினமும் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பாங்கோடு பொலிஸில் அவர் புகார் அளித்தார்.
பொலிஸார் விசாரணை நடத்தி துணை தாசில்தாரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரித்து, துணை தாசில்தாருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் ரூ.16 1/2 லட்சம் அபராதமும் விதித்த அவர், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அபராத தொகையை சிறுமியின் எதிர்கால தேவைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.