வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!


ஐ.பி.எல். ரி-20 தொடரின் 56ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பை மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரணா ஆகியோர் தலா 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்டுகளையும் குமார் கார்த்திகேயா 2 விக்கெட்டுகளையும் டேனில் சேம்ஸ் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 113 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் 51 ஓட்டங்களையும் கிய்ரன் பொலார்ட் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஆந்ரே ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும் டிம் சௌத்தீ மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.