கத்தாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு ( வீடியோ இணைப்பு) !!

 வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில். தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஒழுங்கு படுத்தலின் கீழ், பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.பொதுச்சுடரினை தமிழர் கலை அறிவியியல் பேரவையின் உறுப்பினர் திரு.கமலநாதன் ஏற்றிவைத்ததும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. மே18ல் அநியாயமாகக் கொன்றழிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி ஈகைச்சுடர் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு உரையினை நாம் தமிழர் கட்சியின் வளைகுடா நாடுகளின் இணைப்பாளர் திரு.இளையராஜா நிகழ்த்தியதுடன் நிகழ்வு நிறைவடந்தது.

தகவல் -  தமிழர் கலை அறிவியியல் பேரவையினர்..

தோகா-கத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.