மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் மீண்டும் மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவாகவும், கார், வேன் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களுக்கு 8,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் விநியோக மட்டுப்படுத்தலானது பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.