பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

 


பாராளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


வெலிக்கடை பொலிஸார் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கான சந்தர்ப்பம் தடைப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தை நடத்துவதன் ஊடாக அவர்களின் சிறப்புரிமைகளை மீறப்படலாம் என்பதால், போராட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

பொலிஸாரின் கோரிக்கைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.​

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் பொலிஸாரின் அதிகாரங்களுக்கு அமைய செயற்படுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.