தாக்குதலை மேற்கொள்ள களமிறக்கப்பட்ட கைதிகள்!
நேற்றையதினம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு , அரச அனுசரணையுடன் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார். ” வட்டரெக்க சிறைச்சாலை வேலை முகாமில் உள்ள கைதிகள், நாளாந்தம், அதிகாரிகளின் கண்காணிப்புடன் நிர்மாண வேலைகளுக்கு அழைத்துச்செல்லப்படுவது வழமை என்றும் அவர் கூறினார்.
அவ்வாறு சென்றவர்கள்தான், சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வித வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடவில்லை . என்றும் சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல்போன கைதிகள் தொடர்பான தகவல்களை தெரிந்திருப்பின், சிறைச்சாலை தலைமையகத்துக்கோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறும் சிறைச்சாலை தலைமையகம் கோரியுள்ளது.
கருத்துகள் இல்லை