தமிழகத்தில் மேலும் ஐவர் தஞ்சம்!

 


இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியா சிதம்பர புரம் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட ஐந்து பேருடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.05.22) நள்ளிரவு யாழ்ப்பாணம் -நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு படகில் புறப்பட்ட வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன்,லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் அறிந்த இராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பிரிவு காவற்துறையினர் அவர்களை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.


அதன் போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும், தொழில்களை இழந்து, வாழ்வாதரம் இன்றி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டமையாலேயே தாம் தமிழகம் புகுந்ததாக தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பால் மா 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.


”எனக்கு இரண்டு மாத கை குழந்தை உள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து பால் மா வாங்கி என் குழந்தைக்கு எப்படி கொடுக்க முடியும்? குழந்தைக்கு செலுத்தும் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் போதிய அளவு இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் 6 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள். என் கணவருக்கு போதிய வருமானம் இல்லை இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும் எனவே உயிரை காப்பாற்றி கொள்ள இரண்டு மாத கை குழந்தையுடன் கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்தோம்” என இலங்கை தமிழ் பெண் லதா தெரிவித்தார்.


மேலும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் இந்த 5 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டார்கள்.


கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.