சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!


நாட்டில் தவிர்க்க முடியாத வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

சிறுபோகம் தற்போது பாதியளவு நிறைவடைந்து விட்டது. போதுமான அளவு இரசாயன உரம் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்த முறை 315,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறுகிறது.

வழமையாக சுமார் 4 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறும். சிறுபோகத்திற்காக 80 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் அவசியமாகின்றது.

இருப்பினும், தற்போது நாட்டில் இரசாயன உரத்திற்கான தட்டுப்பாடு நிலவுவதோடு அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் இந்த முறை சிறுபோக விளைச்சல் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.