கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் அபாயம்!!

 


அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை அடக்குவதற்காக அரசாங்கம் பயன்படுத்தும்' கண்ணீர்ப் புகைக்குண்டு' என்ற ஆயுதம் அபாயமானது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது.


 இந்த புகைக்குண்டுகளில் உள்ள இரசாயனங்களால் சுவாசக் கோளாறு, கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் உள்ளிட்ட  உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மருத்துவ சங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 


இத்தகைய குண்டுகள் பயன்படுத்துவதனைக் கண்டித்துள்ள அரச மருத்துவ சங்கத்தினர்,  இவ்வாறான நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதற்கு வழிசெய்யும் எனவும் எச்சரித்துள்ளனர். அவசரகால நிலைமையை மீளப்பெறவேண்டும் எனவும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து நல்லதொரு தீர்வினை எட்டவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.