கோட்டாவின் கீழ் பதவியை ஏற்க மாட்டேன் – சரத் பொன்சேகா!


தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “பொய்ப் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்க நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

அமைதியான, வன்முறையற்ற உள்நாட்டுப் போராட்டத்தின் மூலம் முழு இலங்கை தேசத்தின் முக்கிய கோரிக்கைகளில் நானும் நிபந்தனையின்றி நிற்கிறேன்.

காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இருந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், தேசத்தின் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் மக்களின் கோரிக்கைகளை நான் மிகவும் உணர்கின்றேன்.

ஆரம்பத்தில் இருந்தே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் துணிச்சலான போராளிக் குடிமக்களின் குழந்தைகளுக்கு நான் முழு மனதுடன் ஆசீர்வதித்தேன்.

காலி முகத்திடலில் போராடுபவர்களுடன் கலந்துரையாடாமல் ராஜபக்ஷ நெருக்கடியை தீர்ப்பதில் நான் ஒரு பகுதியாக இருந்ததில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.