இந்தியா அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது!

 


ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டு அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து, இனப்படுகொலையாளிகளான ராஜபக்ச சகோதரர் உட்பட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் ஓட ஓட விரட்டப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகள் உட்பட உடமைகள் தீயிட்டு கொளுத்தப்படும் காட்சிகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன எனவும் சீமான் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.