இலங்கையே எரிந்தாலும் எமக்கென்ன வரப்போகிறது...?!
கதிர்காமத்திலிருந்து குருந்தூர்மலைவரை, தமிழர் தலங்களை ஆக்கிரமித்திருக்கும் எந்த விகாரையும் அகற்றப்படாதவரை....,
காணாமலாக்கப்பட்ட சொந்தங்களுக்கு
நடந்ததென்ன என்பது
கண்டறியப்படாதவரை....,
ஆடைகளைந்து கண்களைக்கட்டி
தலையில் வெடிதீர்த்த
அப்புகாமிகள் கொல்லப்படாதவரை,
இசைப்பிரியாக்களைச் சீரழித்த
இரும்புக்கரங்கள் வெட்டியெறியப்படாதவரை.....,
இலங்கையே எரிந்தாலும்
எமக்கென்ன வரப்போகிறது...?!
-தேவன்
கருத்துகள் இல்லை