பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நாளை!


நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவிருக்கின்றது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்ததை , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.

இந்நிலையிலேயே பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதேவேளை நெருக்கடிக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெறுவதால், எந்த அணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.