வன்முறைகள் சம்பந்தமாக 800க்கும் மேற்பட்டோர் கைது!!

 


கடந்த 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 883 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இவர்களில் அரசியல்வாதிகள் உட்பட அரசியல் ஆதரவாளர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்பு காலிமுகத் திடல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டதுடன் பொது மக்கள் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்து பதில் தாக்குதல் நடத்தினர்.


நாட்டில் நடந்த வன்முறைகள் சம்பந்தமாக 800க்கும் மேற்பட்டோர் கைது


இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, இதுவரை மொத்தம் 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 412 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் 364 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவங்கள் தொடர்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 57 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 68 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் சம்பந்தமாக பொதுமக்கள் தகவல் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக 600 தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 475க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் தொடர்பான படங்கள் மற்றும் 70 காணொளிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


நாட்டில் நடந்த வன்முறைகள் சம்பந்தமாக 800க்கும் மேற்பட்டோர் கைது


இவை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொலிஸ் நிலையங்களுக்கும் குற்றவியல் விசாரணை திணைக்களம் உட்பட சிறப்பு பொலிஸ் பிரிவுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.