யாழ் சிறைச்சாலையில் கைதி உயிாிழப்பு!

 


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவா் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது அம்மன் கோவில் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் குடும்பத் தகராறில் ஈடுபட்டதாக இவர் சுன்னாகம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கடந்த 24ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று சுகவீனம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.