ஊர்குருவி!!


உணவுக்காக வந்து போகும்

ஊர்க்குருவிகள் போல்

மனிதர்களும் வந்து போவார்!

இனிதான வார்த்தைகளில்

தேனூட்டிப்போவார்!

கனிந்த பழத்திற்காய் காத்திருக்கும் பறவைகள் போல்

உண்டவுடன் ஊர்மாறிப்போவார்!


இதில்

பந்த பாசம்

உறவு நட்பு

எல்லாம் ஒன்றுதான்!


உன்னை மட்டும் நம்பு!

உலகம் உனக்கு தெம்பு!

அம்புகள் கண்ணை தீண்டாது

கவனமாய்  எம்பு!


வம்புகள் கற்பினை சீண்டாது

வரம்புகள் வை!

நரம்புகள் புடைக்காத  மனங்களை அறத்தினில் தை!

நிறங்கள் மாற்றாத  குணங்களை அகத்தினில் நெய்!


அஃதே வாழ்வு 

அலாதியாய்

அமையும்!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.