முக்கிய பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!


கொழும்பு - ஆர்மர் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் மக்கள், பொலிஸ் நிலையம் எதிரே நடுத்தெருவில் தற்காலிக கூடாரம் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மக்கள் எரிவாயு கோரி இரண்டு நாட்களாக ஆர்ப்பாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எல்பி எரிவாயு சிலிண்டர்களை கோரி நாவின்ன சந்தியில் 138, ஹைலீவர் வீதியை மறித்து மற்றுமொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நாவின்ன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு எடுப்பதற்காக மக்கள் பல நாட்களாக வரிசையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மண்ணெண்ணெய் கோரி ஒருகொடவத்தை சந்தியில் இருந்து கிராண்ட்பாஸ் வரையான பிரதான வீதியான அரச வீதியில் பாதையை மறித்து இன்று (08-05-2022) காலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.