ரஷ்யாவை ஓரங்கட்ட ஜேர்மனியுடன் கைகோர்த்துள்ள நாடு!

 


ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன.

இந்நிலையில், கத்தார் நாடும் ஜேர்மனியும் தங்கள் ஆற்றல் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான, ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை ஏரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கத்தார், ரஷ்ய இறக்குமதிகளிலிருந்து வேறு பக்கம் திரும்பும் ஜேர்மனியின் திட்டத்தில் மையப்பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.