குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்று முதல் மீண்டும் வழமைப்போல் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,
எனினும் ஒருநாள் சேவை இடம்பெறாது. கடந்த 5ஆம், 6ஆம் திகதிகள் மற்றும் இன்றைய தினம் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன.
அத்துடன், கடந்த 5ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை கையளிப்பதற்காக திணைக்களத்திற்கு வந்து, இலக்கம் அல்லது திகதி முத்திரையை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்கப்படும்.
இதேவேளை நாளை முதல் விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முற்கூட்டிய நேரத்தை ஒதுக்கி கொள்வது அவசியமாகும்.
www.immigration.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் அல்லது 070 71 01 060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை