மட்டக்களப்பில் வயோதிபர் சடலமாக மீட்பு!!

 


மட்டக்களப்பில் விவசாய  நிலத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 


மட்டக்களப்பு - போரதீவுப்பற்று, நெல்லிக்காடு கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  அதே கிராமத்தைச் சேர்ந்த அழகிப்போடி- தங்கராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர்  நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியில் போன காணவில்லை என குடும்பத்தினரால் தேடப்பட்டுள்ளார். 


 இன்று காலை அதிகாலை  கிருமி நாசினி போத்தல் அருகில் இருக்க இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

உறவினர்கள்  வெல்லாவெளிப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த  பொலிஸார் தீவிர விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர். 


பொலிஸ் விசாரணையின் பின்னர் போரதீவுப்பற்று பிரதேசசபை வாகன உதவியுடன் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.