மிரட்டும் மஹிந்த!

 


பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உண்மையை வெளியிடுவேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பில் அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படும் எனவும் மஹிந்த கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என மஹிந்த தெரிவித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.