பிரித்தனியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற 13 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுநாள் 2022 !

 முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை 


கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து    முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில் பிற்பகல் 2:30 மணியளவில் ஒல்ட் பிலேஷ் யாட் ல் இருந்து நீதிக்கானபேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு  முன்பாக வந்தடைந்தது.



பிற்பகல் 3 மணியளவில் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.  பொதுசுடரினை மூத்தசெயற்பாட்டாளர் திரு. சிவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.


பிரித்தானியத் தேசிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. பவித்திரா உதயகுமாரும்



தமிழீழத் தேசிய கொடியினை  2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை பயணித்த தேசியச்செயற்பாட்டாளர் திரு.தர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.


அகவணக்கத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து வைக்கப்பட்டுருந்த நினைப்படத்திற்கான மலர்வணக்கம், சுடர்வணக்கம் பொதுமக்களால் செலுத்தப்பட்டது.


தமிழர் இளையோர் அமைப்பு சார்பில் பவித்திரா உதயகுமார் உரை ஆற்றினார்.


முள்ளிவாய்க்கால் நெருப்பு நினைவுகள் என்னும் தலைப்பில் நடனம் மற்றும் கவி அரங்கம் இடம்பெற்றது.


தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின்   உரைகளும் இடம்பெற்றது.


இறுதியாக தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு தமிழீழம் எனும் இலக்கை அடையும்வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .


இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.