'வாய்தா' ட்ரைலர் வெளியானது!!

 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் மகிவர்மன் சி.எஸ் இயக்கத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி திரையரங்கில் வெளியாகவுள்ள படம் 'வாய்தா'.


கதாநாயகியாக ஜெசிகா நடிக்க நாசர் மற்றும் 'ஜோக்கர்', 'கே.டி என்கிற கருப்புதுறை' பட புகழ் மு.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில்  'வாய்தா' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.


சாமானிய மக்களை சுற்றி நடக்கும் அரசியலை நகைச்சுவை கலந்து பேசியிருப்பதாக இந்த ட்ரைலர் அமைந்துள்ளது.


இப்படம் இருபதிற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.