ஆறுகளை அண்டியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!!
கடும் மழை காரணமாக களனி, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளிலும் அத்தனகல்லு ஓயாவிலும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் ஆற்றை அண்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் மற்றும் நீரியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தெதுரு ஓயா, மஹா ஓயா, பெந்தர கங்கை மற்றும் கிரம ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமை தொடர்பில் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை